சிம்பு நடிப்பைக் கண்டு வியந்த ரிச்சா

'ஒஸ்தி' படத்தில் நாயகி ரிச்சா கங்கோபாத்யாவிடம், "உன் அழகைக் கண்டு நான் வியக்கேன்..." என்பார் சிம்பு. இப்போது அது அப்படியே தலைகீழாக மாறி, நாயகி ஆன்ட்ரியா, "சிம்புவின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்துள்ளார் ஆன்ட்ரியா. சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும் இப்படம் தமக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

"படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் ஆகிவிடுவார். அவருடைய திறமை அபாரமானது. ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்புத் திறனைக் கண்டு நான் வியந்து போகிறேன். "யதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது இப்படம். பொதுவாகவே வலுவிழந்த கதைகளில் முன்னணி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையம்சத்தில் நடிப்பதைத்தான் பெரிதும் விரும்புகிறேன்," என்று ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!