மீண்டும் இணைகிறது ‘ரஜினி முருகன்’ குழு

பொன்ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், சூரி இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத் தில் நடிக்க ஒப்பந்தமாகி உள் ளனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ரெமோ'. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசைய மைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனின் நெருங் கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தி ருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார். இவரது தயாரிப்பில் மேலும் இரு படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் ஒரு படத்தை 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிகுமாரும், மற்றொரு படத்தை இயக்குநர் பொன்ராமும் இயக்க இருக்கிறார்கள்.

பொன்ராம் இயக்க உள்ள படத்தில் 'ரஜினி முருகன்' குழுவை அப்படியே மீண்டும் இணைக்கத் திட்டமிட்டு இருக்கி றார்கள். இதற்கு சிவகார்த்தி கேயன் சம்மதித்துள்ளாராம். "மீண்டும் அதே படக்குழு வுடன் இணைந்து பணியாற்று வதில் மகிழ்ச்சி. ஏற்கெனவே பணியாற்றியவர்களுடன் இணை வது என்பது உற்சாகமான தருணங்களை மீண்டும் பெற்றுத் தரும். இதுபோன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத வையாக அமையும். "எனவே ரஜினி முருகன் படக்குழுவுடன் மீண்டும் இணை யும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்கிறாராம் சிவகார்த்திகேயன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!