திரைக்கு வரும் வீரப்பன் மரணம்

தனி மனிதனாக இரு மாநில அரசுக ளுக்கு எதிராக வனயுத்தம் நடத்திய வன் சந்தனக் கடத்தல் வீரப்பன். தமிழகம், கர்நாடக மக்கள் அவ்வளவு சீக்கிரமாக வீரப்பனை மறந்துவிட முடியாது. இந்நிலையில், நாட்டு நடப்புகளை அப்படியே அப்பட்டமாக படம் பிடித்து வெற்றி பெறும் இயக்குநர் ராம்கோபால் வர்மா, இப்போது வீரப்பனின் வாழ்க் கையைப் படமாக்கி உள்ளார். காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் கடைசி இரண்டு ஆண்டு வாழ்க்கைச் சம்பவங்கள்தான் இப்படத் தின் முக்கிய அம்சமாம்.

‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்று படத்துக்கு பெயர் வைத்திருக்கி றார்கள். தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் வெளியாகப் போகும் இப்படத்தில் வீரப்பனாக இந்தி நடிகர் சந்தீப் பரத் வாஜ் நடித்திருக்கிறார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி யாக உஷா ஜாதவ், முத்துலட்சுமியோடு தந்திரமாக நெருங்கிப் பழகி வீரப்பனை காட்டை விட்டு வெளியே கொண்டு வரும் காவல்துறை உளவாளியாக லிசா ரே நடித்துள்ளனர். “வீரப்பனால் அழித்தொழிக்கப்பட்ட உயிர்கள் என்றால் 97 போலிஸ்காரர்கள், 900 யானைகள் கணக்கில் வருகிறது.

வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தில் சந்தீப் பரத்வாஜ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்