ரஜினிக்காக தேதியை மாற்றிய சிவா

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் இசை வெளியீட்டுக்காக தன்னுடைய ‘ரெமோ’ படத்தின் தீம் இசை வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். ‘கபாலி’ பாடல் வெளியீடு ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படத்தின் முதல் சுவரொட்டி, தீம் இசையை வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்நிகழ்வை வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினியின் தீவிர ரசிகரான அவரது வேண்டுகோளுக்காக இவ்வாறு தேதி மாற்றப்பட்டுள்ளதாக ரெமோ படக்குழு தெரிவித்துள்ளது.

Loading...
Load next