அஜித் கொள்கைகளைப் பின்பற்றும் நயன்தாரா

திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் நயன்தாரா விடம் காதல் தோல்விக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவும் பிரபுதேவாவை பிரிந்த பிறகு, படப்பிடிப்புத் தளங்களில் அமைதியே உருவாக இருந்தார். மதிய இடைவேளை நேரங் களில் நடிகர், நடிகைகள், மற்ற ஊழியர்கள் அனைவரும் ஜாலி யாக அமர்ந்து அரட்டையடிக்க இவர் மட்டும் தனியாக சென்று கேரவனிலேயே உட்கார்ந்திருப்பார். தனிமை விரும்பியாக இருந்தார்.

ஆனால், நாளடைவில் நயன் தாராவிடம் மாற்றங்கள் ஏற்பட்டன. கூடவே ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’, ‘மாயா’ படங்களின் வெற்றி நயன்தாராவை உற்சாக மனநிலைக்கு மாற்றிவிட்டன. அதனால், திடீரென அவரும் அரட்டை நடிகையாக உருவெடுத் தார். தன்னுடன் நடிப்பவர்களோடு சகஜமாக பேசத் தொடங்கினார். அதோடு, தனது வேலை முடிந் ததும் கேமரா முன்பு நிற்பதை தவிர்த்து வந்த அவர், இப்போது அஜித் பாணியில் கேமரா அருகில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து மற்றவர்கள் நடிப்பதை பார்த்து கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார். நயன்தாராவின் இந்த மாற்றங் கள் திரையுலக வட்டாரத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.