விஜய்யின் ‘எங்க வீட்டு பிள்ளை’

விஜய் தனது 60வது படத்தில் நடித்து வரு கிறார். ‘அழகிய தமிழ் மகன்’ பட இயக்குநர் பரதன் இயக்கி வருகிறார். இப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில் லை. படப்பிடிப்பு முடிந்த பிறகே படத்திற்கு பெயர் தேர்வு செய்யப்படுகிறது. முதலிலேயே பெயர் வைத் தால் அது தங்களுக்குச் சொந்தம் என்று சிலர் சர்ச்சை கிளப்புவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், விஜய் நடிக்கும் 60வது படத்துக்கு எம்ஜிஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இதற்குப் படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது. ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்துக்கும் விஜய்யின் 60வது படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ‘படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட்லுக் விஜய் பிறந்த நாளில் வெளியாகும்’ என்றும் தெரிவித்துள்ளனர்.