மீரா ஜாஸ்மின்: காதலிப்பதை தவிர நாயகிகளுக்கு வேறு வேலையில்லை -

நாயகனை காதலிப்பதைத் தவிர பெண் கதாபாத்திரங்களுக்கு சினிமாவில் வேறு வேலை இல்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் கூறியுள்ளார். "சமூகத்திலும் சினிமா விலும் பெண் ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கி றாள். கதாநாயகனுடன் மரத் தைச் சுற்றி ஒடுவது, காத லிப்பது, நடனமாடுவது இதைத் தவிர பெண் கதாபாத்திரங் களுக்கு சினிமாவில் வேறு வேலையில்லை.

கதாநாயகர் களின் நிலை அப்படியல்ல. திருமணமானாலும் வயதானா லும் குழந்தைகள் இருந்தாலும் கூட நாயகர்களின் வளர்ச்சி பாதிப்பதில்லை. ஆனால், நடிகைகள் திருமணமானதும் அழகு போய்விட்டதாகக் கருதி சினிமாவில் இருந்து விலகி விடுகின்றனர். குடும் பத்தில் ஒத்துழைப்பு இல்லா ததும் ஒரு காரணமாக இருக்க லாம். எனக்கு குடும்பத்தில் ஒத்துழைப்பு உள்ளது.

"பெண்களின் மீதான சமூகத்தின் கண்ணோட்டம் தான் இதற்குக் காரணம். காலம் மாறும்போது சினிமாவும் கலைஞர்களும் மட்டுமல்ல; சமூகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும். மாறும் காலத்துக்கு ஏற்ப சமூகக் கண்ணோட்டத் திலும் மாற்றம் வந்தால் மட்டுமே பெண் கதா பாத்திரங்களுக்கு அதிக முக்கி யத்துவம் உள்ள படங்கள் உருவாகும். "என்னைப் பற்றி அதிக சர்ச் சைகள் வருகிறது. அது என் தொழிலைப் பாதித்ததில்லை. என் னைச் சுற்றி தனி உலகத்தை உரு வாக்கியுள்ளேன். அந்த உலகத் தில் நான் மகிழ்ச்சியாக இருக் கிறேன். அந்த உலகத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. அதனால், என்னைப் பற்றி வரும் சர்ச்சைகள் பாதிப்பது கிடையாது. இருந்தாலும் இது சினிமாவில் சகஜம்," என்றார் மீரா ஜாஸ்மின்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!