மனதுக்குப் பிடித்த மணமகன் சிக்கவில்லை - ஸ்ரேயா

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா உள்ளிட்ட சில கதாநாயகிகள் 30 வயதைத் தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்கள். இவர்களிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தால், "எங்கள் மனதுக்குப் பிடித்த மாப்பிள்ளை இன்னும் சிக்கவில்லை, திருமணத்துக்கான நேரம் கனியவில்லை," என்றெல்லாம் காரணங்கள் சொல்லி நழுவுகிறார்கள். இதனால் அவர்களின் பெற்றோர்கள் பெரும் தவிப்பில் உள்ளனர். சில கதாநாயகிகள் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகிறார் கள். பிரியாமணியும் சமந்தாவும் தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். பிரியாமணி, தொழிலதிபரை மணக்க உள்ளார். சமந்தா, இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக

வும் விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார். நயன்தாராவுக்கு 31 வயதாகிறது. சிம்பு, பிரபுதேவாவுடனான இவரது இரண்டு காதல் களும் தோல்வியில் முறிந்து இப்போது முழு நேரமும் சினிமாவே கதி என்று உள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 3வது காதல் துளிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்காவுக்கு 34 வயதாகிறது. கடந்த வருடமே திருமணத்துக்கு அவர் தயாராகிவிட்டதாக தகவல் கள் வந்தன. இதுபற்றி கேட்டால், "சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியது உள்ளது. திருமணத் துக்கு இன்னும் நேரம் வரவில்லை," என்கிறார்.

காஜல் அகர்வாலுக்கு 30 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகவர்வாலுக்கு இரண்டு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. அடுத்து காஜலுக்குத்தான் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அவரும் "திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை. இன்னும் காலம் உள்ளது," என்று சொல்லிவிட்டு ஒதுங்குகிறார். திரிஷாவுக்கு 33 வயது. இவருக்கும் பட அதிபர் வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நிச்சய மாகி, கடைசி நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். திரிஷா இப்போது சினிமாவில் மீண்டும் 'பிஸி'யாகிவிட்டார். "திருமணம் என்பது சொந்த விஷயம். அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்," என்று சொல்லிவிட்டார். தமிழ், தெலுங்குப் படங்களில் ஓஹோ என்று இருந்த ஸ்ரேயா வுக்கு இப்போது படங்கள் இல்லை. 33 வயதாகும் அவரிடம் எப்போது உங்கள் திருமணம் என்று கேட்டால், "நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் தயாராக வில்லை," என்கிறார். திருமணம் செய்து கொண்டாலோ அல்லது அதுபற்றி பேசினாலோ படவாய்ப்புகள் குறைந்து சினிமா வாழ்க்கை பாதித்துவிடும் என்று பயந்தே திருமணப் பேச்சு எடுப்பதையே இவர்கள் தவிர்க் கிறார்கள். ஆனால், இந்த நடிகை களின் பெற்றோர்கள்தான் மகள்களுக்கு திருமண வயது தாண்டுகிறதே என்ற தவிப்பில் பதைபதைக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!