குழந்தை கடத்தல் குறித்த படம் ‘காத்தாடி’

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காத்தாடி’. இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவி யின் அக்காள் மகன். நடிகை மகேஸ்வரியின் சகோதரர். இப் படத்தின் கதாநாயகியாக தன்‌ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், ‘பசங்க’ சிவகுமார், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பேபி சாதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். ஜெமின் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு இசையமைத்துள் ளார் பவன். பின்னணி இசையை மட்டும் தீபன் என்பவர் வழங்கி உள்ளாராம்.

படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் மோகன்ராஜன் எழுதி உள்ளார். கதை திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதுடன் படத்தையும் இயக்கியுள்ளார் எஸ்.கல்யாண். இவர் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கத சொல்ல போறோம்’ படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. “இந்தப் படத்தை முழுக்க முழுக்க அதிரடி, நகைச்சுவை கலந்து உருவாக்கி இருக்கிறோம். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை பணத்திற் காக இரண்டு பேர் கடத்துகி றார்கள். காவல்துறை அதிகாரி யாக வரும் தன்‌ஷிகா திருடர் களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படிக் காப்பாற்றினார் என்பதை விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளோம்.

“ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன், சென்னையில் படப் பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரை வில் படம் திரைக்கு வருகிறது. “தன்‌ஷிகாவுக்கு இந்தப் படம் நிச்சயம் திருப்புமுனை தருவதாக அமையும். பக்குவமான நடிப்பை வழங்கி உள்ளார். அதேபோல் அவிஷேக் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்தார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கி றது,” என்கிறார் கல்யாண்.