டாப்சியின் பிரசாரம்

நடிகை டாப்சியை தமிழ்ப் படங் களில் தொடர்ந்து காண முடிய வில்லை. அம்மணி இந்தியில் பிசியாக இருப்பதாக சில ரும், வேறு புது வாய்ப்புகள் கிடைக் காத காரணத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக ஒரு தரப்பும் மாறி மாறி சொல்லி வரு கின்றனர். இரண்டில் எதுதான் உண்மை என தெரிந்து கொள்ள வேண்டாமா? விசாரித்த போதுதான் டாப்சி பிற மொழி படங் களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது உறுதி யானது. அது மட்டுமல்ல, நடிப் புடன் சேர்த்து சமூக சேவைகளி லும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளாராம்.

மதுப் போதை யிலும் வேகமாக வும் வாகனங்களை இயக்கக் கூடாது என்று பார்ப்பவர் களிடம் எல்லாம் வலியுறுத்திக் கொண்டிருக்கி றார் டாப்சி. மதுவுக்கு எதிரான இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் மிகுந்த ஆர் வத்துட னும் சமூக அக்கறை யுடனும் ஈடுபட்டு இருப்பதாக சொல்பவர், வேறு சில விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் பங்கேற்க இருப்பதாகச் சொல்கிறார். டாப்சி நடிப்பில், ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்கள் மட்டுமே தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்தன. தற்போது இந்தியில் நான்கு படங்களில் நடித்து வருகிறாராம். இதற்காக மும்பையில் முகாமிட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான், வாகன ஓட்டிகளால் நடக்கும் விபத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.