தனராம் சரவணன் இயக்கும் ‘கொளஞ்சி’

ஒய்ட் ஷடோஸ் புரொடெக்ஷன்ஸ் சார்பாக நவீன் தயாரிக்கும் படம் 'கொளஞ்சி'. இவர் இதற்கு முன் னர் 'மூடர் கூடம்' என்ற படத்தை தயாரித்து இயக்கிப் பரவலாகப் பலரது பாராட்டுகளைப் பெற்றவர். சிம்புதேவன், நவின் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய தனராம் சரவணன் 'கொளஞ்சி' படம் மூலமாக இயக்குநராக உயர்ந்துள்ளார். சரி... என்ன மாதிரியான கதையைக் கையாண்டுள்ளாராம்? "தன் இஷ்டம்போல் வாழ நினைக்கும் பனிரெண்டு வயது சிறுவனுக்கும் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்கவேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் இப்படத்தின் கதை.

"சமுத்திரக்கனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபா கரன், நசாத், ரஜின்.எம். பிச்சைக் காரன் மூர்த்தி, கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் முக் கிய கதாபாத்திரங்களை ஏற்றுள் ளனர். "ராசிப்புரம், கோக்கராயன் பேட்டை போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முர மாக நடந்துவரும் நிலையில் பாடல் வெளியீடு விரைவில் நடை பெறவுள்ளது," என்கிறார் தனராம் சரவணன். "வழக்கமான கதைகளில் இருந்து இது சற்றே மாறுபட்ட கதைக்களம். குறிப்பாக சமுத்தி ரக்கனி மிக அழுத்தமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது கதைக்கும் எங்களது முயற்சிக் கும் வலு சேர்த்துள்ளது. "இந்தக் கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அந்த நம்பிக் கையுடன் ரசிகர்களை சந்திப் போம்," என்கிறார் தயாரிப்பாளர் நவீன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!