‘காதலனை கைப்பிடிக்கிறேன்’

நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணமாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'பிடிச்சிருக்கு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். ஆனால் அப்படம் சரியாக ஓடாததால் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், சில ஆண்டுகள் கழித்துத் தமிழில் இவர் மீண்டும் நடித்த 'கண்ணா லட்டுத் தின்ன ஆசையா' படம் பெரும் வெற்றி பெற்றது. சேது, சந்தானம், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இப்படம் விசாகா சிங்கிற்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'வாலிப ராஜா', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படங்கள் பெரியளவில் இவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை விசாகா மணம் புரியப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன. விசாகாவின் காதலரான விக்ராந்த் ராவ், விமான நிறுவனம் ஒன்றின் விளம்பரப்பிரிவு அதிகாரியாக பணி புரிகிறார். ரோம் நகரத்தில் பணிபுரியும் விக்ராந்த்-விசாகா இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது இவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது. விக்ராந்த் குறித்து பேசிய விசாகா, "விக்ராந்த் பழகுவதற்கு இனிமையானவர். எனது காதல் எப்போதோ தொடங்கிவிட்டது. இப்போது மிகவும் ஆழமாக நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் காதல் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அவர் மிகவும் கனிவானவர். அவரை காதலனாக அடைந்தது எனது பாக்கியம். "என் வாழ்வில் இன்னொருவரை காதலனாக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. விரைவில் எங்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்," என்று கூறியிருக்கிறார்.2016-06-09 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!