மன்னர் வேடத்தில் சூர்யா

சுந்தர்.சி இயக்கும் சரித்திரப் படத்தில் மன்னராக நடிக்கிறார் சூர்யா. ‘பாகுபலி’ படம் பார்த்து இது போல் ஒரு படம் இயக்க வேண்டும் எனப் பல இயக்குநர்கள் மனதில் நினைத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்புக்கும் அவர்கள் காத்திருக்கிறார்கள். அதுபோல் நினைத்த இயக்குநர் சுந்தர்.சி, அதற்கான தொடக்கப் பணி களில் இறங்கிவிட்டார். சரித்திரப் பின்ன ணியில் ‘பாகுபலி’ பாணியில் முன் னணிக் கலைஞர்களின் பங்க ளிப்புடன் அந்த பிரமாண்ட படத்தை உருவாக்க முயற்சி எடுத்துள்ளார். ஒரே சமயத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு மொ ழி க ளி ல் இந்தப் படத்தை உருவாக்கவும் அவர் முடிவு செய்தி ருக்கிறார். இதை மறைந்த ராம நாராயணனின் தேனாண்டா ள் பிலிம்ஸ் தயாரிக் கிறது.

பிரமாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நாயகனாக, மன்னர் வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருகிறார்கள். சிங்கம் 3 படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து இரு படங் களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற் கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இந்நிலையில் சுந்தர்.சி தனது படத்தில் நடிக்கக் கேட்டு இருப்பதால், அது குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளாராம் சூர்யா. சரித்திரப் படம், அதே சமயம் வணிக ரீதியிலான படமாக இருக்கும் என்பதால், இதில் நடிக்க சூர்யா அதிக ஆர்வம் காட்டுகிறாராம். மேலும் ஒரு சில பிரபல நாயகர்களும் இதில் நடிப்பார்களாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்