ராணாவுக்கு பிடித்த மீன் தலைக்கறி உணவு

சென்னை­யி­லி­ருந்து ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

கம்பீரத்துடனும் சற்றும் சிரிக்கா மலும் 'பாகுபலி' வில்லனைப் போலவே காட்சியளித்தார் சென்னை­யில் நடந்த சைமா செய்­தி­யா­ளர் கூட்­டத்­திற்கு வந்திருந்த ராணா டகுபதி. ஆனால், இவ்வாண்டின் சைமா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் ராணா, தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது சிரித்த முகத்துடன் பதிலளித்தார். அவரது கையின் மணிக்­ கட்­டுப் பகு­தி­யில் இருந்த கட்டை பற்றி விசா­ரித்­த­போது 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாக படப்­ பி­டிப்­பின்­போது சண்டைக் காட்­சி­யில் காயம் அடைந்த­தா­கச் சொன்னார்.

"பாகுபலி இரண்டாம் பாகப் படப்­பிடிப்­புக் காட்­சி­கள் இன்னும் தீவிர­மாக இருக்­கின்றன. முதல் பாகத்தைவிட இதில் அதி­க­மான சண்டைக் காட்­சி­களை எதிர்­பார்க்­க­லாம்," என்றார்.

'பாகுபலி' படத்­தின் தாக்கம் தற்போது சீனா, தைவான், ஜெர்மனி போன்ற நாடு­களி­லும் பரவி வரு­கிறது. இப்படம் தைவா­னில் மொழி பெயர்க்­கப்­பட்­டு ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு காட்சிகள் திரை யிடப்படுவதாகவும் சீனாவில் கிட்­டத்­தட்ட சுமார் 5,000 திரை­ய­ரங்­கு­ களில் இப்படத்தை வெளி­யி­டப்­போ­வதாகவும் ராணா கூறினார். நாயகனோ அல்லது வில்­லனோ எந்த வேடம் கொடுத்­தா­லும் மகிழ்ச்சியாக நடிப்­பேன் என்று தெரி­வித்த ராணா வாய்ப்­புக் கிட்­டினால் அஜித் படத்­தில் வில்­லனாக நடிக்க விருப்­பம் உள்ளது என்றும் கூறினார்.

அஜித்திற்கு வில்லனாக நடிக்க விரும்புவதாகக் கூறினார் ராணா டகுபதி. படம்: திமித்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!