சிங்கப்பூருக்கு வருகை தரும் நட்சத்திர பட்டாளம்

­­­சென்னை­யி­லி­ருந்து ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

தென்­னிந்­திய திரை­யு­ல­கமே ஒன்­று­கூடும் 'சைமா' விருது நிகழ்ச்­சி­யின் தொடர்­பில் சென்னை­யில் முன்னோட்ட பத்­தி­ரிகை­யா­ளர் சந்­திப்பு நடத்­தப்­பட்­டது. துபாயில் கடந்த ஆண்டு கலக்­கிய தென் இந்திய கலை உலகப் பிர­ப­லங்கள் இம்முறை சிங்கப்­பூர் வரு­கிறார்­கள். தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம் எனும் நான்கு இந்திய மொழி­களைச் சார்ந்த திரைப்­பட நடி­கர்­கள் வரும் ஜூன் 30, ஜுலை 1 ஆகிய தேதி­களில் சிங்கப்­பூ­ரில் நடைபெற­வி­ருக்­கும் 'சைமா' விருது நிகழ்ச்­சி­யில் ஒன்­று­கூட உள்­ள­னர். ஐந்தாம் முறையாக நடை பெ­றும் 'சைமா' எனும் தென் இந்திய அனைத்­து­லக திரைப்­பட விருது நிகழ்ச்­சி­யின் முன்­னோட்ட செய்­தி­யா­ளர் கூட்டம் நேற்று முன்தினம் சென்னை­யின் 'தாஜ் கிளப் ஹவுஸ்' ஹோட்­ட­லில் நடந்தது. இந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நடி­கர்­கள் ஜெயம் ரவி, குஷ்பு, ராணா டகுபதி, வேதிகா ஆகியோர் கலந்­து­கொண்ட­னர்.

திரைப்­பட உலகில் உயரிய விரு­து­களுக்­குப் பெயர்­போன நடிகைக் குஷ்பு, கடந்த ஐந்து ஆண்­டு­களில் சைமா விருது நிகழ்ச்சி பல­ம­டங்கு வளர்ந்­துள்­ளது, பெரு­கி­யுள்­ளது என்று கூறினார். ஒட்­டு­மொத்த தென் இந்தியத் திரை உலகம் ஒரு குடும்ப­மாக ஒன்­று­கூடும் நேரம் இது என்று தெரி­வித்த குஷ்பு ஒவ்வொரு விருதும் தகு­தி­யா­ன­வ­ருக்கே செல்ல வேண்டும் என்­ப­தற்­காக ஒரு சிறப்பு நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். சிங்கப்­பூர் தமக்­குப் பிடித்­த­மான நக­ரங்களில் ஒன்று என்றும் அங்­குள்ள ரசி­கர்­களைச் சந்­திக்க ஆவலாக இருப்­ப­தா­க­வும் கூறினார் கூட்­டத்­தில் பேசிய நடிகர் ஜெயம் ரவி.

விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள... பிரம்மாண்டமான விருது நிகழ்ச்சி சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி மையத்தில் இம்மாதம் 30ஆம் தேதியும் (தெலுங்கு, கன்னடம்) ஜூலை மாதம் முதல் தேதியும் (தமிழ், மலையாளம்) நடைபெற உள்ளது. நுழைவுச் சீட்டு விவரங்களுக்குச் 'சிஸ்டிக்' நிலையத்தை கீழ்க்கண்ட இணைய முகவரியில் நாடலாம்: http://www.sistic.com.sg/

'சைமா' எனப்படும் தென் இந்திய அனைத்­து­லக திரைப்­பட விருது நிகழ்ச்­சி­யின் முன்­னோட்ட செய்­தி­யா­ளர் கூட்டத்தில் கலந்துகொண்ட (இடமிருந்து) சைமா விருது நிகழ்ச்சியின் தலைவர் பிருந்தா பிரசாத், திரையுலகப் பிரபலங்கள் ஜெயம் ரவி, குஷ்பு, ராணா டகுபதி, வேதிகா, நிக்கி கல்ராணி.
படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!