சித்தார்த்துக்கு ஜோடியான ஆண்ட்ரியா

சித்தார்த் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அடுத்து 'தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்ற படத்தில் நடிக்கும் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க இருக்கிறார். முதல் முறையாக இப்படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் புதிய படத்தை சித்தார்த்தின் 'எடாகி எண்டர்டெயின்மென்ட்' நிறுவனமும் 'வயாகாம் 18' ஆகிய நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கின்றன.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை மிலண்ட் ராவ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஆர்யா வின் தம்பி சத்யாவை வைத்து 'காதல் 2 கல்யாணம்' என்ற படத்தை இயக்கியவர். ஆனால், அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!