அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கும்படி சிலர் தன்னை நிர்ப்பந்திப்பதாக புகார் எழுப்புகிறார் இளம் நாயகி. ஒரு கட்டத்தில் இத்தகைய வற்புறுத் தல்கள் எல்லை மீறும்போது, சம்பந்தப் பட்ட படப்பிடிப்பில் இருந்து வெளியேறு வதாக படக்குழுவினரை மிரட்டியதாகவும் அண்மைய பேட்டியில் அவர் கூறி உள்ளார். ஆனந்தியின் பேட்டி கோடம்பாக்கத் தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த ஆதங்கம் குறித்து நடிகர் சங்கம் விரைவில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவிக்கின் றனர். சரி... முதலில் ஆனந்தி சொல்வதைக் கேட்போம்.
"ஏற்கெனவே நான் நடித்த சில படங்களில் எனக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டன. குறிப்பிட்ட இயக்குநர் ஒருவர், என்னிடம் சொன்ன கதையை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சி யாக நடிக்கும்படி வற்புறுத்தினார். அரைகுறை ஆடையை கொடுத்து அப்படக்குழுவினர் அதை உடுத்தச் சொன்னார்கள். என் உடல் வாகுக்கு கவர்ச்சி எடுபடாது. கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சினிமாவில் அறிமுகமானபோதே முடிவு செய்து விட்டேன். "எனவே கவர்ச்சி ஆடைகளை உடுத்த மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். அதையும் மீறி வற்புறுத்தினால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விடுவேன் என்றும் மிரட்டினேன். இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்,
குட்டைப் பாவாடை அணிய மாட்டேன் என்றெல்லாம் இயக்குநரிடம் உறுதியாகச் சொல்லிவிட்டுத் தான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன். "என்னைப் பொறுத்தவரையில் கவர்ச்சியை விட எனது நடிப்புத் திறமையை பெரிதும் நம்பு கிறேன். அதன்மூலம் ரசிகர்களை என் வசப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே சமயம் விருதுக்குரிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்கவில்லை. வணிக ரீதியான பொழுதுபோக்குப் படங்களில் நடிப்பதிலும் எனக்கு ஆர்வம் உண்டு.
"அந்தக் காலம் தொடங்கி இன்றுவரை கவர்ச்சியை நம்பியிருக்காமல் நடிப்பால் சாதித்த நடிகைகள் பலர் உள்ளனர். சாவித்ரி, ரேவதி, நதியா என்று ரசிகர்கள் ஆராதித்த இத்தகையவர்களே எனது முன்மாதிரிகள். "அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்களின் வரிசையில் எனக்கும் ஓர் இடம் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. இது நிறைவேற கடுமையாக உழைக்க தயாராக உள்ளேன். எனினும் ஆதரவு அளித்து என்னை ஏற்றுக்கொள்வது ரசிகர்களின் தனிப்பட்ட முடிவு," என்கிறார் ஆனந்தி.