விஜய் படத்தை தயாரிக்கும் லைக்கா

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது 61ஆவது படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அண்மையில் ‘விஜய் 61’ படத்தை சிவாஜி புரொடக் ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது லைக்கா நிறுவனம் விஜய் படத்தை தயாரிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

லைக்கா நிறுவனம் ஏற்கெ னவே விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்தது. மேலும் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தையும் தயாரித்துள்ளது. சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது.