விஜய் சேதுபதியைக் கண்டு பயந்த ரித்திகா

படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதியைக் கண்டு பயந்தாராம் இளம் நாயகி ரித்திகா சிங். ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமான குத்துச்சண்டை வீராங்கனை ரித் திகா சிங், இப்போது விஜய் சேது பதியுடன் இணைந்து ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்நாள் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி இவரிடம் எதுவும் மிகவும் அமைதியாகவே இருந்தாராம். இதனால் அவரை நெருங்கவே பயந்தாராம் ரித்திகா. “பிறகு ஒன்றிரண்டு வார்த்தை கள் பேசினாலும் முகத்தை மிக வும் சீரியசாக வைத்துக் கொள்வார் சேதுபதி.

மொழி தெரியாததால் அவர் ரொம்பவும் சீரியசான மனித ராக இருப்பார் என்று பயந்தேன். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவர் பேசுவது எனக்குப் புரிய ஆரம்பித்தபோதுதான் அவர் பேசு வது எல்லாமே நகைச்சுவையாக இருப்பது தெரியவந்தது. இப்போது நான் தமிழ் கற்றுக்கொண்டதும் என்னிடம் நெருங்கிப் பேச ஆரம்பித்து விட்டார்.

‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, ரித்திகா, இயக்குநர் மணிகண்டன்.