கீர்த்திக்கு கிடைத்த புதிய தாய்மாமன்

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு தாய்மாமனாக நடிக்க தம்பி ராமையா ஒப்பந்தமாகி உள்ளார். ‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரே‌ஷுக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தனு‌ஷுடன் இவர் நடித்துள்ள ‘தொடரி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து விஜய் ஜோடியாக ‘விஜய் 60’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பரதன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரே‌ஷுக்கு தாய்மாமனாக தம்பி ராமையா நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவரது நடிப்பை வெகுவாக ரசிப்பதாக விஜய், கீர்த்தி இருவருமே வெளிப்படையாகத் தெரிவித்துப் பாராட்டியுள்ளனர். கீர்த்தியின் இந்தப் பாராட்டால் உச்சி குளிர்ந்து போனாராம் தம்பி ராமையா. பின்னே நடிகை பாராட்டினால் உற்சாகம் எகிறத்தானே செய்யும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்