சுந்தர்.சி: எனக்குப் பொருத்தமான ஜோடி பூனம்

சுந்தர். சி நடிப்பில் அடுத்து ‘முத்தின கத்திரிக்கா’ என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதைப்படி பூனம் பஜ்வாதான் தமக்குப் பொருத்த மான ஜோடி என்று சுந்தர்.சி கூறியிருக்கிறார். ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ படங்களில் முக்கிய வேடங் களில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்குப்பிறகு நாயகனாக நடித்திருக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகனாக நடித்தது ஏன்? பூனம் பஜ்வா தனது ஜோடி ஆனது எப்படி? என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.

“தொலைக் காட்சியில் எந்த மொழி படத்தை ஒளிபரப்பினாலும் அதைப் பார்ப்பேன். அதேபோல் ‘வெள்ளி மூங்கா’ மலையாளப் படத்தைப் பார்த்தேன். சிறிது நேரம் பார்த்தவுடன் அதை முழுவதும் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அந்த அளவு படம் அருமையாக இருந்தது. “கடந்த 2014இல் திரைக்கு வந்த அந்தப் படத்தை தமிழில் மறுபதிப்பு செய்ய விரும்பினேன். எனவே அதற்கான உரிமையை வாங்கினேன். நாற்பது வயதான பிறகும் திருமணம் ஆகாத நாய கன் இளம் வயது நாயகியை விரும்பும் கதை இது. அரசியல், நகைச்சுவை கலந்த இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துவிட்டேன்.