சொந்தக்குரலில் பேச விரும்பும் பிரயாகா

தமி­ழில் 'பிசாசு' படம் மூலம் அறி­மு­க­மா­ன­வர் மலை­யாள நடிகை பிர­யாகா மார்ட்­டின். ஆனால் அந்தப்­ப­டத்­தில் அவர் பேசு­வ­தற்கு வச­னங்கள் ஏதும் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அதனால் அதில் அவர் பேயாக உலா­வினார். அந்த வருத்­தத்­தில் தனக்­குச் சொந்தக்­கு­ர­லில் பேசு­வ­தற்­குக் கூட ஒரு வாய்ப்­புக் கிடைக்­கா­மல் போய்­விட்­டதே என நீண்ட நாட்­க­ளாக வருத்­தத்­தில் இருந்தார் பிர­யாகா. ஆனால் அண்மை­யில் மலை­யா­ளத்­தில் வெளி­யான 'ஒரு­முறை வந்து பார்த்­தாயா' படம் மூலம் அந்தக்­குறை நீங்­கி­ய­தால் தற்­போது மகிழ்ச்­சி­யில் இருக்­கிறார் பிர­யாகா.

அந்தப்­ப­டத்­தின் இயக்­கு­நர் சாஜ­னி­டம், தனக்­குச் சொந்தக்­கு­ர­லில் பேச வாய்ப்­புத் தரு­மா­றும் அது ஒத்துவர­வில்லை என்றால் 'டப்­பிங்'கிற்கு வேறு ஆள் போட்­டுக்­கொள்­ளுங்கள் என­வும் கோரிக்கை வைத்­தா­ராம். இயக்­கு­ன­ரும் இதற்­குச் சம்­ம­தித்­தா­ராம், இயக்­கு­நர் சாஜன் கொடுத்த ஊக்­கத்­தில் முழுப்­ப­டத்­தி­லும் சிறப்­பாக டப்­பிங் பேசி அசத்­தினா­ராம். இப்­போது தான் நடித்து வரும் 'பாவா' மற்­றும் 'ஒரே­மு­கம்' ஆகிய படங்களி­லும் தனது சொந்தக்­கு­ர­லில் பேசப்­போ­வ­தாக கூறி­யுள்­ளார் பிர­யாகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!