ஜெயம் ரவி பிறந்த நாளில் வெளியாகும் ‘போகன்’ படப் பாடல்கள்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'போகன்'. இதன் பாடல்களை அவரது பிறந்த நாளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 'ரோமியோ ஜூலியட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி, ஹன்சிகா, இயக்குநர் லக் ஷ்மண் , இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் 'போகன்'. பிரபல நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். அரவிந்த் சாமி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுவை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அண்மையில் இப்படத்தின் முதல் சுவரொட்டி வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் பிறந்த நாள் சிறப்பம்சமாக வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பாடல்களை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் பிறந்த நாளன்று ஜெயம் ரவியின் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!