வெற்றிமாறன் படத்தில் சமுத்திரக்கனி

வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படத்தில் நடித்த சமுத்திரக்கனி, மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். 'விசாரணை' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார் சமுத்திரக்கனி. இதன் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. இந்நிலையில், வெற்றிமாறன் அடுத்து தனுஷை வைத்து இயக்க இருக்கும் 'வடசென்னை' படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி இணையும் 'வடசென்னை' படத்தில் ஏற்கெனவே வில்லன் வேடத்தில் நடிக்க டேனியல் பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும், சமுத்திரக்கனிக்கு மிக முக்கியமான வேடம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். படப்பிடிப்புக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!