கூத்துக் கலைஞர்களின் கதையைச் சொல்லும் புதுப்படம்

'திருட்டு வி.சி.டி.' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து 'காதல்' சுகுமார் இயக்கும் இரண்டாவது படம் 'சும்மாவே ஆடுவோம்'. ஸ்ரீரங்கா புரொடெக்ஷன்ஸ் சார்பில் டி.என்.ஏ. ஆனந்தன் தயாரிக்கும் இப் படத்தில் அருண் பாலாஜி நாயகனாக அறிமுகமாகிறார். புகழ் பெற்ற நீச்சல் வீரரான இவர், குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்தவர். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏ. ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு உட்பட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

பல முன்னணி நட்சத்திரங்களுடன், 45 நகைச்சுவை நடிகர்களும் நடித் துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் 'காதல்' சுகுமார். "கூத்துக் கலை என்பது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது. அந்தக் கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையைத்தான் இதில் சொல்லி இருக்கிறோம். முழுக்க முழுக்க நகைச்சுவையாக கதை நகரும்.

"கதைப்படி, மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்துக் கலைஞர்க ளுக்காக ஒரு கிராமத்தையே இலவச மாக கொடுக்கிறார். அந்தக் கிராமத் துக்கு 'கூத்துப்பேட்டை'ன்னு பேரு. அங்கு வாழ்பவர்கள் நவீனகால கலை வளர்ச்சியோடு போட்டி போட முடியா மல் தடுமாறுகிற நேரத்தில், அந்தக் கிராமமே பறிபோய்விடும் என்பது போன்ற ஆபத்து நெருங்குகிறது. அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் கதை யின் போக்கு.

"நீச்சல் வீரரான அருண்பாலாஜியை நாயகனாக அறிமுகப்படுத்துகிறோம். இவர் அனைத்துலக அளவில் நீச்சலில் பல சாதனைகளை செய்திருக்கிறார். நடிப்பிலும் எதிர்நீச்சல் போட்டு சாதித் துள்ளார். கதையின் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் பாத்திரத்தில் தயாரிப்பாளர் ஆனந்தன் நடித்துள்ளார். "மூன்று காலகட்டத்தில் நடப்பது போல இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந் துள்ளது. மிக விரைவில் திரை காணும்," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சுகுமார்.

'சும்மாவே ஆடுவோம்' படத்தில் அருண் பாலாஜி, லீமா பாபு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!