மீண்டும் காதலிக்கும் திரிஷா, ராணா

நடிகை திரிஷா, நடிகர் ராணா இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளி யாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டனர். விருந்து நிகழ்ச்சிகளிலும் பங் கேற்றனர். அவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற படங்களும் இணையத் தளங்களில் வெளிவந்தன. யார் கண்பட்டதோ தெரியவில்லை. திடீரென கருத்து வேறுபாடு ஏற் பட்டு, பட விழாக்களுக்கு சேர்ந்து வருவதைத் தவிர்த்தனர். இந்நிலையில், திரிஷாவுக்கும் பட அதிபர் வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடி வெடித்து நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள்.

ஆனால் திடீரென்று அவர் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தார்கள். நிச்சய தார்த்தமும் ரத்தானது. இதற்கிடையில் ராணாவை நடிகைகள் ஸ்ரேயா, காஜல் அகர்வால் ஆகியோருடன் இணைத்து தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக் கள் பரவின. சில பட விழாக்களில் ஸ்ரேயாவுடன் கைகோர்த்தபடி ராணா கலந்துகொண்டார். தற் போது இந்த இரண்டு நடிகை களும் அவரது நட்பு வட்டத்தில் இருந்து விலகிவிட்டனராம். இந்த நிலையில் ராணாவுக்கும், நிச்சயதார்த்தம் ரத்தான திரிஷா வுக்கும் இடையே மீண்டும் காதல் துளிர்த்துள்ளதாக பேச்சு அடிபடு கிறது. அதை உறுதிப்படுத்துவது போல் அவர்கள் இப்போது ஜோடியாக விழாக்களுக்கு வருகிறார் கள். திரிஷாவை காதலிப்பதாக வெளியான தகவலுக்கு ராணா பதில் அளித்துள்ளார்.