மன்னிப்பு கோரிய நயன்தாரா

'நானும் ரவுடிதான்' படத்தில் தனது நடிப்பு நடிகர் தனு‌ஷுக்குப் பிடிக்கவில்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் பேசிய அவர், இன்னும் சிறப்பாக நடித்து தனுஷை கவர விரும்புவதாகவும் தெரிவித்தார். ஹைதராபாத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் தென்னிந்திய திரை யுலகத்தினர் திரளாகப் பங்கேற்றனர்.

2015ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான 'காக்கா முட்டை', 'நானும் ரவுடிதான்' ஆகிய படங்கள் ஃபிலிம்ஃபேர் விருதுப் பட்டியலில் இடம் பெற்றன. இதில் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படம் என்ற விருதை 'காக்கா முட்டை' வென்றது. அவ்விருதைப் பெற்றுக்கொண்ட தனுஷ், 'காக்கா முட்டை' படத்தில் ஐஸ்வர்யா ராஜே‌ஷின் நடிப்பு அனைத்துலக தரத்துடன் இருந்தது என்றும் அந்த நடிப்புக்கு இன்னும் அதிகமாகப் பாராட்டு கிடைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. அவ்விருதைப் பெற்றுக்கொண்ட அவர், "நான் தனு‌ஷிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்," என்று கூறியபோது அரங்கில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், "இப்படத்தில் என் நடிப்பு தனு ‌ஷுக்குப் பிடிக்கவில்லை. எனவே இன்னும் சிறப்பாக நடித்து அவரைக் கவர வேண்டும் என விரும்புகிறேன். இயக் குநர் விக்னேஷ் சிவ னுக்கு என் நன்றி," என்றார். நயன்தாராவின் இப்பேச்சால் அரங் கில் இருந்தவர் கள் ஆச்ச ரியமடைந்தனர். 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு சமயத்தில்தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் = நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!