படப்பிடிப்பு முடிந்து திரை காணத் தயாராகிவரும் ‘வீர சிவாஜி’

விக்ரம் பிரபு நடிப்பில் உரு வாகிவரும் 'வீர சிவாஜி' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அதிரடி சண்டைக் காட்சி களுடன் உருவாகியுள்ள இப் படத்தை 'தகராறு' கணேஷ் விநாயக் இயக்கி வருகிறார். நாயகி ஷாமிலி. டி.இமான் இசையமைத்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக் குழுவினர் அறிவித் துள்ளனர்.

விரைவில் இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிடப் போவதாகவும் தெரி வித்துள்ளனர். விக்ரம் பிரபு நடிப்பில் தற் போது 'வாகா' படம் முடிவ டைந்து வெளியீடு காணத் தயாராக உள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி சுதந்திர தினத்தை யொட்டி அப்படம் வெளியாகும். இதையடுத்து 'வீர சிவாஜி' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. 'வீர சிவாஜி' படத்திற்காக சிம்பு 'தாறுமாறு' என்று ரோகேஷ் வரிகளில் உருவான ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!