சிவகார்த்திகேயனின் ரெமோ சுவரொட்டி

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தின் சுவரொட்டியை இயக்குநர் ஷங்கர் வெளியிட இருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, கலை இயக்குநர் முத்துராஜ், அனிருத் என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் கைகோத்துப் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹாலிவுட் ஒப்பனையாளர் சீன் பூட்ஸும் பணியாற்றுகிறார். கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் சுவரொட்டியுயையும் ஒரே ஒரு பாடலையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்தச் சுவரொட்டியை ‘அந்நியன்’ படத்தில் ‘ரெமோ’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய ஷங்கர் வெளியிட உள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.