கவர்ச்சி முக்கியமல்ல என்கிறார் சஞ்சிதா

தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வந்துள்ளதால், சஞ்சிதா ஷெட்டி எந்நேரமும் பரபரப்பாக உள்ளாராம். ‘சூது கவ்வும்’, ‘பீட்சா’ உள் ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சிதா. இப்போது ஒளிப்பதிவாளர் நட்டி கதாநாயகனாக நடிக்கும் ‘என்கிட்டே மோதாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நட்டியின் ஜோடியாக நடிக்கும் சஞ்சிதாவுக்கு கிராமத்து இளம் பெண் வேடமாம். இது நகைச் சுவைப் படம். முதல்முறையாக நெல்லைத் தமிழ் பேசி நடிக்கிறார். படம் முழுவதும் பாவாடை, தாவணி கட்டி வருவாராம்.

முன்னதாக பரத் நடிக்கும் ‘என்னோடு விளையாடு’ படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விட் டது. அடுத்து ‘ரம்’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வருகி றார். ‘லவ்குரு’, ‘தேவதாஸ் பிர தர்ஸ்’ படங்களிலும் நடிக்கிறார். இது தவிர, கன்னடத்தில் தயா ராகும் ‘பத்மாஷ்’ படத்தில் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாள ராக நடித்து வருகிறார். “எனது நடிப்பில் இந்தாண்டு மட்டும் ஐந்து படங்கள் அடுத்த டுத்து வெளியாக உள்ளன. மேலும் பல படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகின்றன.