யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு ஒன்றரை கோடி ரூபாய்

பிபாசா பாசு தமிழில் விஜய்யுடன் 'சச்சின்' என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் அண்மையில் நடந்து முடிந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு ரூபாய் ஒன்றரை கோடி வாங்கியது பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிகின்றன. பிபாசா பாசு நன்றாக யோகா செய்யக்கூடியவர். தினமும் யோகா மற்றும் தியானம் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். சக நடிகைகளுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறார்.

அதனால் கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிபாசா பாசு அழைக்கப்பட்டு இருந்தார். பிபாசா பாசுவுடன் மாநில முதலமைச்சர் சித்த ராமையாவும் யோகாவில் கலந்துகொண்டார். இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபாசா பாசுவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. அத்துடன் பிபாசா பாசு பெங்களூரு வந்து செல்வதற்கான விமான பயணச்செலவை கர்நாடக அரசே ஏற்றுள்ளது. அவர் ஆடம்பர ஓட்டலில் தங்குவதற்கும் பெரிய செலவு செய்துள்ளனர்.

யோகா நிகழ்ச்சி சமூக நலன் சார்ந்தது. அதற்காக ஒரு நடிகைக்குப் பெரிய தொகை கொடுத்து வரவழைத்து அரசு பணத்தை விரயம் செய்வதா? என்று கர்நாடக அரசுக்குப் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பணம் வாங்கிக்கொண்டு இதில் பங்கேற்ற பிபாசா பாசுவை விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. இவர் அரைகுறை ஆடையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதாக சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!