சிவகார்த்திகேயன்: முன்னணி நாயகிகளுக்கு நன்றி

அண்மை­யில் 'ரெமோ' படத்­தின் பத்­தி­ரிகை­யா­ளர் சந்­திப்பு நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்­சி­யில் பிரம்­மாண்ட இயக்­கு­நர் சங்கர், சிவ­கார்த்­தி­கே­ய­னின் பெண் வேடம் கொண்ட முதல் சுவ­ரொட்­டியை வெளி­யிட்­டார். அன்றைய நிகழ்ச்­சி­யில் சிவ­கார்த்­தி­ கே­யன் பேசும்­போது, "என்­னு­டன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை­களுக்கு நான் இந்த சம­யத்­தில் நன்றி கூறிக்­கொள்­கி­றேன். காரணம் அவர்­கள் நடிக்க ஒத்­துக்­கொண்­டி­ருந்தால் கீர்த்தி சுரே‌ஷுடன் இந்தப் படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தி­ருக்­காது. அவர் இந்தப் படத்தில் கதைக்கு பொருத்­த­மாக நடித்து அசத்தியிருக்கிறார்," என்றார்.

'ரெமோ' படத்தில் தான் விரும்­பும் ஒரு பெண்ணை அடை­வதற்கு ஒருவன் எந்த அள­விற்கு ஆபத்­தான வேலை­களில் ஈடு­படு­கிறான் என்­ப­து­தான் கதையாம். அதனால் படத்தின் காதா­நா­யகி முன்னணி நடிகை­யாக இருந்தால் நன்றாக இருக்­கும் என்று முடிவெடுத்தார்களாம். அதனால்தான் முன்னணி நாய­கிக­ளா­கப் பார்த்­துப் பேசி­ யி­ருக்­கிறார்­கள். அவர்­கள் அனைவரும் மறுக்கவே கீர்த்­தி சுரேஷையே கதா­நா­யகி ஆக்கிவிட்­டார்­கள்.

"இதுவும் நல்­ல­து­தான் என்று நினைக்­கி­றேன்," என்று சிவகார்த்திகேயன் கூறினா­லும் அவர் மனதில் ஒரு மூலையில் ஏமாற்றத்தின் சிறு வருத்­தம் இருப்­பதை அறிய முடிந்தது. "அதற்­கென்ன சிவா அடுத்த படத்­தில்­தான் உங்களுடைய விருப்ப நாய­கி­யான நயன்­தா­ரா­வு­டன் இணைய இருக்­கி­றீர்­களே! ஏன் வருத்தப்படுகிறீர்கள்? நீங்கள் உயரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர். இனி அனைத்து நடிகை­களும் உங்களு­டன் இணைந்து நடிக்க முடியவில்லையே என்று அவர்கள்தான் வருத்தப்படுவார்கள்," என்றார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!