பிரபலங்களைக் காண அடித்தது யோகம்

சுதாஸகி ராமன்

‘சைமா’ எனும் தென் இந்திய அனைத்துலகத் திரைப்பட விருது விழாவிற்குச் சென்று தமக்குப் பிடித்த நடிகர், நடிகை களைக் காணும் முயற்சியில் மக்கள் நேற்று முன்தினமே தமிழ் முரசு அலுவலகத்திற்கு முன்னால் வரிசை பிடிக்கத் தொடங்கிவிட்டனர். லிட்டில் இந்தியாவின் 31, பேராக் சாலையில் அமைந்திருக் கும் தமிழ் முரசு விளம்பரப் பிரிவின் அலுவலகத்திற்கு வந் திருந்த முதல் 50 அதிர்ஷ்ட சாலிகளுக்கு நுழைவுச்சீட்டுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டன.

சுமார் 45 நிமிடங்களில் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் உள்ளூர் வர்த்தகர் டெபி இங்கின் ஆதரவால் வழங்கப்பட்டன. விக்ரம், நயன்தாரா, ஷ்ருதி ஹாசன் போன்ற நட்சத்திரங் களைக் காணவேண்டும் என்ற ஆவலில் திரு தவமுருகன் ஜோதி முருகனும் அவரது நண்பர் ராஜாவும் சனிக்கிழமை இரவு சுமார் 10 மணிக்கெல்லாம் தமிழ் முரசு அலுவலகத்திற்கு முன்னால் வரிசை பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களும் மேலும் மூவரும் சைமா நுழைவுச் சீட்டுகளைப் பெறும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்று இரவுப் பொழுதை அங்கேயே கழித்தனர். தமிழ் முரசு கதவுகள் காலை திறந்தவுடன் முதல் ஆளாக நுழைவுச் சீட்டுகளைப் பெற்ற அவர்கள் பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார்கள்.

தமிழ் முரசு நாளிதழை ஒவ்வொரு நாளும் தவறாமல் படிப்பதாகவும் தங்கள் திரையுலக நட்சத்திரங்களை நேரில் காண இப்படி ஒரு வாய்ப்பை தமிழ் முரசு ஏற்படுத்திக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறினர். “காலை 9 மணிக்கு வந்த போது பலர் வரிசையில் நிற்பதைக் கண்டாலும் முயற்சி செய்யலாம் என்று நினைத்து வரிசையில் சேர்ந்தேன். எதிர்பாராதவிதமாக இரு சீட்டுகளைப் பெற்றேன்,” என்று கூறினார் 50வது இறுதி நபராக நுழைவுச் சீட்டுகளை வென்ற 23 வயது சு.ராஜேஷ். இத்துடன் சைமாவுக்கான $45 நுழைவுச்சீட்டுகள் அனைத் தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இனிமேல் அனைத்து நுழைவுச் சீட்டுகளையும் சிஸ்டிக் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விலைக்கு வாங்க முடியும்.

தலா இரண்டு நுழைவுச்சீட்டுகளை வென்ற அதிர்ஷ்டசாலிகள். படங்கள்: திமத்தி டேவிட்