சுரேஷ் காமாட்சி: ரசிகர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

"எதற்காகப் பேருந்து பேருந்தாக ஏறி திருட்டு விசிடிக்கள் விற்பவர்களைப் பிடிக்கவேண்டும். பேசாமல் திருட்டு விசிடியை சட்டபூர்வமாக்கி விடுங் கள். வருமானமாவது கிடைக்கும்," என்று அதிரடி ஆலோசனை வழங்கி யுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள 'பகிரி' என்கிற புதிய படத்தின் பாடல் கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். ஒளிப்பதி வாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் வசந்த பாலன், ஏ.வெங்கடேசன், ரவிமரியா, சமுத்திரக்கனி, டி.பி.கஜேந்திரன், ஐந்து கோவிலான், மாரிமுத்து, இப் படத்தை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. "இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டப்பேரவையில் பேசி இருக்கிறார், மகிழ்ச்சி. இன்று தமிழ்ச் சினிமா குற்று யிரும் குலையுயிருமாக இருக்கிறது.

சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். "ஆனால், படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள். இன்று சினி மாவை யாரும் பார்க்காமல் இல்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார் கள். இணையத் தளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுக்க வேண்டியது உள்ளது.

'பகிரி' படத்தின் ஒரு காட்சியில் பிரபு ரணவீரன், ஷர்வியா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!