‘இருமுகன்’ படத்தில் தனக்குத் தானே வில்லன் ஆன விக்ரம்

‘அந்நியன்,’ ‘ஐ’ ஆகிய பிரம்மாண்டமான படங்களை அடுத்து விக்ரம் நடிக்க, மிக அதிக பொருட்செலவில் உருவாகும் படம், ‘இருமுகன்.’ இதில், முதல்முறையாக அவர் இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படம் இது. ‘புலி’ படத்தை தயாரித்த சிபுதமீன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.

பெரும்பகுதி காட்சிகள் அங்குதான் படமாக்கப் படுகின்றன. இது, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம் என்கிறது படக்குழு. இந்நிலையில், விக்ரம் ஏற்றுள்ள இரு வேடங்களில் ஒன்று வில்லன் கதாபாத்திரமாம். சூர்யா, விஜய் வரிசையில் விக்ரமும் தனக்குத்தானே வில்லனாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.