புதிய லட்சியம்: விவரிக்கும் பவர்ஸ்டார்

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என்பதையே இதுநாள் வரை தனது லட்சியமாகச் சொல்லி வந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. அனுஷ்கா, திரிஷாவுக்கு நாயகனாக வேண்டும் என்பதே அவரது புதிய லட்சியமாம். மிர்ச்சி சிவா நடிப்பில், சினிமா பின்னணியில் உருவாகி இருக் கும் 'அட்ரா மச்சான் விசிலு' படத்தில் 'சூப்பர் ஸ்டார்' கதா பாத்திரத்தில் பவர் ஸ்டார் பட்டையைக் கிளப்பி இருப்பதாக படக்குழுவினர் சொல்கிறார்கள்.

வருகிற ஜூலை 7ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந் நிலையில் இப்படம் குறித்தும் தனது எதிர்கால லட்சியம் குறித் தும் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் பவர் ஸ்டார். "தொடக்கம் முதல் இப்போது வரை ரஜினி சாருக்கு நான்தான் போட்டி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் வேடத்தில் நடித்ததால் கூடுதல் வசனங்கள் எல்லாம் பேசவில்லை. கதைக்கு என்ன தேவைப்பட்டதோ, இயக்குநர் எந்த வசனத்தை சொல்லிக் கொடுத்தாரோ, அதை மட்டும் தான் பேசியிருக்கிறேன்.

"மற்றபடி தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசவில்லை. நகைச்சுவைப் படம் என்பதால் தனியாக ஸ்டைல் எதுவும் செய்ய வில்லை. ஆனால் நிறைய அதிரடி வசனங்கள் உள்ளன. இந்தப் படம் வெளியான பிறகு இனி குழந்தைகள் பேசுவது எல்லாம் என்னுடைய வசனங்களாகவே இருக்கும். அதை நீங்களும் மற்ற வர்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்.

"என்னோட லட்சியம் என்று பார்த்தால் அனுஷ்கா, திரிஷா இருவருடனும் நடிக்கவேண்டும். அதுவும் கதாநாயகனாக நடிப்பதே ஆசை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபி கூட எனது அடுத்த படத்துக்காக அனுஷ்கா, திரிஷாவிடம் பேசி வருகிறார். அவர்களது கால்‌ஷீட் கிடைக்கா விட்டால், மற்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்யுமாறு கூறி யுள்ளேன். எனினும் நிச்சயம் ஒருநாள் எனது லட்சியம் நிறை வேறும்," என்று சிரிக்காமலேயே பேசுகிறார் பவர் ஸ்டார்.

'அட்ரா மச்சான் விசிலு' படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!