மீண்டும் நடிக்க வந்த நிலா

'அன்பே ஆருயிரே' படம் மூலம் தமிழில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நிலா. சிறிதுகாலம் காணாமல் போயிருந்தவர் மறுபடியும் சூர்யா இயக்கிய 'இசை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் லண்டனில் குடியேறி தனது தந்தையின் தொழில்களைக் கவனித்து வந்தாராம். இப்போது மீண்டும் நடிக்க வந்து, வந்த வேகத்தில் சில படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அவர் நடித்தது, நடிக்கப் போவது தமிழில் அல்ல, இந்தியில்! தன்னுடைய இயற்பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே நடிக்கிறார் அம்மணி.

அண்மையில் அவர் நடித்த சின்ன பட்ஜெட் இந்திப் படம் ஒன்று வெற்றி பெறவே, தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. தமிழில் திடீரென முன்னணிக்கு வந்துள்ள எஸ்.ஜே.சூர்யாவை அண்மையில் தொடர்புகொண்டவர், "நீங்கள் அடுத்து படம் இயக்கினால் நிச்சயம் நடிப்பேன். அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்றாராம் மீரா சோப்ரா. சூர்யாவும் நேரம் வரும்போது அழைப்பதாகக் கூறியுள்ளாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!