சந்தானம் படத்துக்கு தடை கோரி வழக்கு

'தில்லுக்கு துட்டு' என்ற படத் துக்குத் தடை கேட்டு வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதற்கு நடிகர் சந்தானம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 'பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்புதீன். இவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் சந்தானம் தன்னை மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். "எங்கள் நிறுவனத்தின் சார்பில், 'ஆவி பறக்க ஒரு கதை' என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்தப் படத்தின் இயக்குநராக ராம்பாலா என்பவர் நியமிக்கப்பட்டார்.

"இப்படத்தின் கதை விவாதத் துக்காக பல லட்சம் ரூபாய் செலவிட்டேன். நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பல லட்சம் முன்தொகை கொடுக்கப்பட்டது. "இந்த நிலையில், நடிகர் சந்தா னத்துடன், இயக்குநர் ராம்பாலா கைகோர்த்து, என்னுடைய 'ஆவி பறக்க ஒரு கதை' படத்தின் கதையை, 'தில்லுக்கு துட்டு' என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தை விரைவில் வெளியிடவும் உள் ளனர். இதுகுறித்து நடிகர் சந்தானத்திடம் பேசியபோது, 'உங்களால் என்ன செய்ய முடி யுமோ, அதை செய்யுங்கள்' என்று கூறியது மட்டுமல்லாமல், என்னை மிரட்டவும் செய்தார்.

"எனவே, இப்படத்தை வெளி யிட தடை விதிக்கவேண்டும்," என்று முகமது மஸ்தான் சர்பூதீன் தமது மனுவில் கோரியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இரு தரப்பினரும் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்..

தில்லுக்கு துட்டு' படத்தின் ஒரு காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!