‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி

வில்சன் சைலஸ்

தெலுங்குத் திரையுலகில் என்றும் சிரஞ்சீவியாகத் திகழும் நடிகர் சிரஞ்சீவிக்கு சிங்கப்பூரில் 'மெகா ஸ்டார்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சைமா விருது விழாவில் நேற்று தெலுங்கு, கன்னட திரை விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பலத்த கரவொலி களுக்கிடையே விருது வாங்கிய வெற்றிப்பட நாயகனான சிரஞ்சீவி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழி திரைப்பட நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் ஜொலிக்க சன்டெக் சிட்டி நேற்று திரையுலகமாக மாறியது. ஐந்தாவது முறையாக நடை பெறும் சைமா எனும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா பிரம்மாண்டமாக நேற்று தொடங்கியது. இந்த இரு நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.

சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், புதுமுகம் என 15 பிரிவுகளின் கீழ் நியமனம் செய்யப்பட்ட ராணா டகுபதி, சமந்தா, ஷ்ருதி ஹாசன், என பலர் விருதுகளைப் பெற்றனர். சிங்கப்பூரில் நடைபெறும் சைமா விருது நிகழ்ச்சியில் உள்ளூர், வெளிநாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,000 ரசிகர்கள் கலந்துகொண்டனர். பலரும் நட்சத்திரங்களைக் காண ஆர்வத்துடன் சன்டெக் சிட்டியில் திரண்டனர். நட்சத்திரங்களும் ரசிகர் களுடன் உற்சாகத்துடன் 'செல்ஃபி' எடுத்து மகிழ்ந்தனர்.

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்த 'இரு முகன்' திரைப்படத்தின் தெலுங்கு மொழி முன்னோட்டக் காட்சி நேற்றைய நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. இரவு சுமார் 7 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி தொடக்கத் திலேயே களைகட்டியது. ஆடல் பாடல் என பல்வேறு விறுவிறுப்பான அங்கங்கள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. சைமா விருது நிகழ்ச்சியின் இரண் டாவது நாளான இன்று தமிழ், மலையாள மொழி களுக்கான விருது கள் வழங்கப்படும். நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை ரசிகர்கள் சன்டெக் சிட்டியில் மாலை 5 மணி முதல் வாங்கிக் கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!