ஆட்டம் கொண்டாட்டத்துடன் களைகட்டிய ‘சைமா’

­­­சு­தா­ஸகி ராமன்

மாலை மயங்­கும் வேளையில் வண்ண ஆடைகள் கண்­களைப் பறிக்க, நெடுக விரிக்­கப்­பட்­டி­ருந்த சிவப்­புக் கம்ப­ளத்­தில் நளி­ன­மும் கம்பீ­ர­மா­கப் பவனி வந்து பார்வை­யா­ளர்­களின் மனங்களைக் கொள்ளைகொண்ட­னர் 'சைமா' விருது முதல் நாள் நிகழ்ச்­சிக்கு வருகை தந்­தி­ருந்த திரை நட்­சத்­தி­ரங்கள். கைதேர்ந்த ஆடை வடி­வமைப்­பா­ளர்­களின் கைவண்­ணத்­தில் மிளிர்ந்த அழகான உடைகளை அணிந்து 'ஆவ்டி' கார்­களி­லி­ருந்து இறங்­கிய நட்­சத்­தி­ரங்களைச் சுற்றி வளைத்த புகைப்­ப­டங்களின் வெளிச்­சம் இரவைப் பக­லாக்­ கி­யது.

இதற்­கிடை­யில், ரசிகர்களின் கைபே­சி­களில் செல்ஃபி எடுத்­துக்­ கொடுக்க நட்சத்­தி­ரங்கள் மறுக்­க­வில்லை. கன்னட, தெலுங்கு திரைப்­பட உலகின் நடிகைகள், நடி­கர்­கள், திரைப்­பட இயக்­கு­நர்­கள், இசை அமைப்­பா­ளர்­கள், பாட­கர்­கள் என்று 'சைமா' விருது நிகழ்ச்­சி­யின் முதல் நாளில் நட்­சத்­தி­ரங்கள் பலர் கலந்­து­கொண்டு சிறப்­பித்­த­னர். நிகழ்ச்­சியைத் தொடங்கி வைக்க ப்ரணிதா, பிரக்யா ஜெய்ஷ்­வால் ஆகிய நடிகை­கள் துடிப்­பாக நட­ன­மாடி ரசி­கர்­களைக் கவர்ந் த­னர். கடந்த ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட திரைப்­ப­டங்களில் இடம்­ பெற்ற பிரபல தெலுங்கு, கன்­ன­டப் பாடல்­களுக்­குக் கண்­க­வர் நட­னங்களை ஆடிய நட்­சத்­தி­ரங் களுக்கு ஊக்­க­ம­ளிக்­கும் வகையில் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த பார்வை­யா­ளர்­கள் ஆர்ப்­ப­ரித்­த­னர்.

ஆந்­தி­ரா­வின் விஜ­ய­வா­டா­வி­லி­ருந்து வந்து கடந்த ஓராண்டாக சிங்கப்­பூ­ரில் பயிலும் கோல்மன் கல்லூரி மாண­வர்­கள் மூவர் தங்களுக்­குப் பிடித்­த­மான நட்­சத்­தி­ரங்களைக் கண்­டு­வி­ட­வேண்­டும் என்ற எதிர்­பார்ப்­பு­டன் பிற்­ப­கல் மூன்று மணிக்­கெல்­லாம் சன்டெக் மாநாட்டு மையத்­துக்கு வந்த­னர். "எனக்­குப் பிடித்­த­மான நடி­க­ரான சிரஞ்­சீ­வியை நேரில் காண வந்­துள்­ளேன். என் தாய்­நாட்­டில் கிடைக்­காத இந்த அரிய வாய்ப்பு சிங்கப்­பூ­ரில் கிடைத்­த­தில் மட்­டற்ற மகிழ்ச்சி," என்றார் 21 வயது ராம்­ச­ரண்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!