நட்சத்திரங்களை மொய்த்த ரசிகர் கூட்டம்

'சைமா' எனும் தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட விருது விழா நேற்று இரண்டாம் நாளாக சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் களைகட்டியது. சிவப்புக் கம்பளத்தில் துள்ளல் நடைபோட்டு வந்த தமிழ், மலையாளத் திரையுலக நட்சத்திரங்களை நேரில் கண்டுகளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் ரசிகர்கள் கடலெனத் திரண்டிருந்தனர். விக்ரம், சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட முன்னணித் திரை நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

(படத்தில்) தங்களது உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நடிகர், நடிகையரைக் காணும் பரவசத்தில் இருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ். இவர் 'மாரி' திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகர் பிரிவில் விருதுக்கு முன்மொழியப்பட்டிருந்தார். யார் யாருக்கு என்ன விருது கிடைத்தது, ரசிகர்களுக்குக் கலைவிருந்து படைத்த திரைக்கலைஞர்கள் யார் போன்ற விவரங்கள் நாளை ஞாயிறு முரசில் விரிவாக இடம்பெறும். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!