இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்த நயன்தாரா

ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

சிங்கப்­பூர் நயன்­தா­ரா­வுக்கு இரட்­டிப்பு மகிழ்ச்­சியைத் தந்­துள்­ளது. 'சைமா' தென்­னிந்­திய திரைப்­பட விருது நிகழ்ச்­சி­யில் தமிழ், மலை­யா­ளம் இரண்­டி­லுமே சிறந்த நடிகை விருது பெற்­ற­தோடு விக் னேஷ் சிவன் கையால் விருதை வாங்­கி­ய­தில் நயன்­தா­ரா­வுக்கு பெரு மகிழ்ச்சி. அவரது மகிழ்ச்­சி­யில் அரங்கமே பங்­கெ­டுத்து ஆர­வா­ரித்­தது. 'நானும் ரவு­டி­தான்' படத்­திற்­காக தமிழில் சிறந்த நடிகை­யாக விருது அறி­விக்­கப்­பட்­ட­தோடு தன்னை நம்பி 'காதம்பரி' வேடத்தை தந்த விக்னேஷ் சிவ­னுக்கு முக்­கி­ய­மாக நன்றி கூறினார்.

விருதை வழங்க ஸ்ரீபிரியா மேடையில் காத்­தி­ருக்க, விக்னேஷ் சிவன் கையால் விருதை வாங்க விரும்­பு­வ­தாக அவர் கூற, அவர் மேடைக்கு வந்து விருது வழங்­ கினார். முன்னர் அதே படத்­துக்­காக சிறந்த இயக்­கு­நர் விருதைப் பெற்ற விக்னேஷ், படத்­தில் நடிக்­கத் தொடங்­கி­ய­தில் இருந்து இன்­று­வரை தனக்கு உறு­துணை­யாக இருந்து வரும் நய­னுக்கு நன்றி கூறினார்.

நய­னி­டம் கதை சொல்ல போனபோது, அதிக பதற்­ற­மாக இருந்த­தா­கச் சொன்ன விக்னேஷ், "உண்மை­யில் பக்­கத்­தில் இருந்து அவரை ஒருமுறை பார்த்­து­வி­ட­லாம் என்­று­தான் போனேன்," என்­ற­போது கீழே அமர்ந்தி­ருந்த நயன் உட்பட எல்­லா­ருமே சிரித்து விட்­ட­னர். சன்டெக் மாநாட்டு மண்ட­பத் தில் வெள்­ளிக்­கிழமை இரவு நடை பெற்ற தென்­னிந்­திய திரைப்­பட விருது விழா­வுக்கு பர­ப­ரப்பை­யும் கல­க­லப்பை­யும் ஏற்­படுத்­தி­னர் விக்னேஷ் சிவனும் நயனும்.

சிறந்த இயக்­கு­நர், சிறந்த நடிகை, சிறந்த இசை­யமைப்­பா­ளர், சிறந்த பாடகர், சிறந்த நகைச்­சுவை நடிகர் என தமிழ்ப் பிரிவில் ஆக அதி­க­மாக 'நானும் ரவு­டி­தான்' ஐந்து விரு­து­களைப் பெற் றது. அதேபோல் மலை­யா­ளத்­தில் 'பிரேமம்' திரைப்படமும் ஆறு விரு­து­களை வென்றது. தமிழ், மலை­யா­ளம் இரு பிரி­வு­களி­லும் தலா 33 விரு­து­கள் வழங்கப்­பட்­டன. பெரும்பா­லான தமிழ் நட்­ சத்­தி­ரங்களு­டன் மலையாள நட்­சத்­தி­ரங்களும் தமி­ழி­லும் பேசியது நிகழ்ச்­சியை மேலும் சிறப்­பாக்­கி ­யது. தமிழ், மலை­யா­ள பட விருது வழங்­கும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு மேல் தொடங்கி பின் னிரவு 2 மணி வரை நீடித்தது. விறு­வி­றுப்பான பாடல்­கள் பாடி, ஆடிய அனி­ருத்­தும் சுழன்று ஆடிய ஹன்­சி­கா­வும் நிகழ்ச்­சியைத் துடிப்­பாக வைத்திருந்தார்­கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!