வாழ்நாள் சாதனையாளர் பஞ்சு அருணாசலம்; காந்தக்குரலால் அசத்திய ஷ்ரேயா

தமிழ்த் திரை­யு­ல­கின் பழம்பெரும் பிரபலமான பஞ்சு அரு­ணா­ச­லத்­திற்கு வாழ்நாள் சாதனை­யா­ளர் விருது வழங்­கிக் கௌர­விக்­கப்­பட்­டது. இயக்­கு­ந­ராக, திரை­க்கதை­ஆ­சி­ரி­ய­ராக, பாட­லா­சி­ரி­ய­ராக, தயா­ரிப்­பா­ள­ராக ஆற்றிய பல பணி­ களுக்­காக 'சைமா' தமிழ்ப் பிரிவில் அவர் விருது வழங்கிக் கௌரவிக் கப்பட்டார். சிங்கப்­பூ­ரில் இந்த விருதைப் பெறு­வ­தில் பெருமை அடை­வ­தா­கக் கூறிய, 75 வய­தா­கும் திரு பஞ்சு அரு­ணா­ச­லம், 'ப்ரியா' படத்­தின் பாட­லுக்­காக சிங்கப்­பூர் தனக்கு முதன் முதலில் விருது அளித்­ததை நினை­வு­கூர்ந்தார். முழுக்க முழுக்க சிங்கப்­பூ­ரில் பட­மாக்­கப்­பட்ட 'ப்ரியா' பெரும் வெற்­றிப்­ப­டம் என்­ப­து­டன் ரஜி­னி­காந்தை முதன்­மு­த­லில் முழு நாய கனாக அறிமுகப்படுத்திய படம் அது என அவர் கூறினார்.

எட்டுப் படங்களுக்கு மேல் இயக்கி இருக்­கும் அவர் ஆறி­லி­ருந்து அறுபது வரை, கல்யாண ராமன், மைக்கேல் மத­ன­ கா­ம­ ரா­ஜன், குருசிஷ்யன், எங்கேயோ கேட்ட குரல் போன்ற பல படங் களைத் தயா­ரித்­துள்­ளார். 'காத லின் தீபம் ஒன்று,' 'கண்ம­ணியே காதல் என்பது கற்பனையோ' போன்ற பல பிர­ப­ல­மான பாடல்­களை எழு­தி­யுள்ள அவர், முரட்டுக் காளை, மீண்டும் கோகிலா, சகலகலா வல்லவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார். 'நானும் மனி­தன்­தான்' என்ற இவரது முதல் ­பா­டல் 1960ல் வெளி­யா­னது. ஏஎல்எஸ் ஸ்டூ­டி­யோ­வில் செட் உதவி­யா­ள­ராக திரை­யு­லகப் பய­ணத்தைத் தொடங்­கிய இவர் கண்­ண­தா­ச­னின் உற­வி­னர். ஆரம்பத்­தில் அவரது உதவி­யா­ள­ரா­கப் பணிபுரிந்­துள்­ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்கு வந்துள்ள இவர், கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல் களை எழுதியுள்ளார்.

70கள் முதல் 90கள் வரையில் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்திருந்த முக்கியப்புள்ளிகளில் ஒருவரான பஞ்சு அருணாசலத்திற்கு விருது வழங்கப்பட்டபோது அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரைப் பெருமைப்படுத்தியது. அவரது காலத்து முன்னணி நட்சத்திரங்களான குஷ்புவும் ராதிகாவும் இந்த விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தனர். படங்கள்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!