அரங்கை அசத்திய அனிருத், ஹன்சிகா

தமி­ழ­வேல்

பின்னிரவு 1 மணி இருக்­கும். தூக்கக் கலக்­கத்­தில் சோர்வ டையத் தொடங்­கிய பார்வை­யா­ளர் கள் திடீரென உற்­சா­கம் அடைந் தனர். கைத்­தொலை­பே­சி­களு­டன் இருக்கையை விட்டு எழுந்தனர். சிங்க நட­னத்­து­டன் அட்­ட­கா­ச­மாக அரங்­கிற்­குள் நுழைந்த அனிருத், கூட்­டத்­தின் உணர்ச்­சியை மெல்ல மெல்ல உச்சத்திற்குக் கொண்டுசென்றார். 'தெறி'யில் அதிர வைக்கத் தொடங்­கிய அவர், 'தங்கமே', 'ஓலா அமீகோ'வில் ஆரம்பித்து 'மாரி'யில் சுரு­தி­யேற்றி, 'ஆலுமா டோலுமா'வுக்கு அரங்கையே ஆட வைத்தார் அனிருத். மேடையை விட்டு இறங்கி வந்து, அவர் ஆடி­ய­ப­டியே பாட, ஆண்கள், பெண்கள், பெரி­ய­வர் கள், சிறு­வர்­கள் அனைவருமே எழுந்து ­நின்று ஆடத் தொடங் கினர். வேகமான இசையும் கணீ­ரென்று ஒலித்த அனி­ருத்­தின் குரலும் நிகழ்ச்­சி­க்கு முத்­தாய்ப் பாய் அமைந்தது.

அனி­ருத்­துக்கு இணையாக அசத்­த­லான நட­னத்­தால் கூட்டத் தைக் குதூ­க­லிக்க வைத்­தார் ஹன்சிகா மோத்வானி. காவலர்கள் சூழ வரும் தேவதை போல் பிரம்­மாண்ட ஊர்­தி­யில் கழுத்­தி­லி­ருந்து கால் வரை போர்த்­திய உடை­யு­டன் அரங் கினுள் நுழைந்த ஹன்சிகா, நிமி­டத்­திற்­குள் மாறிய இசைக்கு ஏற்ப தாளத்தை மாற்றி வேகமாக அவர் ஆடிய ஆட்­ட­மும் ஆடை மாற்றிய வேகமும் அசர வைத்தன. 'ஓ காதல் கண்மணி' படத்­திற் காக சிறந்த பாட­லா­சி­ரி­யர் விருதை வைர­முத்­து­வுக்கு அறிவித்­த­வர் படத்­தின் பெயரைச் சரியாக உச்­சரிக்­க­வில்லை என்று ஆதங்கப்­பட்டார் ராதிகா. பெண்களைக் கிண்டல் செய்­வதை­யும் 'கிளார்கி கிளார்கி' என்று பேசுவதையும் விடுத்து நகைச்சுவையைத் தொட­ருங்கள் என்று அறி­விப்­பா­ளர்­களுக்கு அறிவுரை கூறினார் சுஹாசினி.

'கபாலி'யை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த ராதிகா ஆப்தே, அழகழகான மாலை நேர உடைகளில் வந்து பெருமூச்சு விட வைத்த ஸ்ரேயா, ப்ரணிதா, ஹன்சிகா, வேதிகா, லஷ்மி ராய், அமிரா தஸ்தூர், மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய விக்ரம், சிவகார்த்திகேயன், அல்லு அர்ஜுன் என்று பலரும் நிகழ்ச்சிக்கு நிறம் சேர்த்தனர். நிகழ்ச்­சியைத் தமிழில் தொகுத்து வழங்கிய மிர்ச்சி சிவா, சதீஷ், தன்யா மலை­யா­ளத்­தில் பேசிய ரஞ்சனி ஹரிதாஸ், ஆகியோர் ஏறக்­குறைய ஆறு மணி நேரம் நீடித்த நிகழ்ச்­சியைத் துடிப்­பு­டன் வைத்­தி­ருந்த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!