சாந்தினிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

திரையுலகில் தனக்கான அங் கீகாரம் கிடைத்துவிட்டதாக பூரிப்புடன் சொல்கிறார் இளம் நாயகி சாந்தினி. தற்போது எட்டு புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், இதுவே தனக்கு அங்கீ காரம் கிடைத்ததற்கான அடையாளம் என்றும் அவர் கூறுகிறார்.

கே. பாக்யராஜின் இயக்கத்தில் சாந்தனு வுடன் 'சித்து+2' படத்தில் கதாநாயகி யாக அறிமுகமான வர் சாந்தினி. பின்னர் 'வில் அம்பு' உள்பட சில படங் களில் நடித்தார்.

அதன் பிறகு திடீரென சாந்தினியை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. வாய்ப்புகள் தேடி வராத தால், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் என்று கூட பேசப்பட்டது. ஆனால் திடீரென நடிக்க வந்ததுடன், கை வசம் நிறைய வாய்ப்புகளையும் வைத்துள்ளார் அம்மணி. இது எப்படி சாத்தியமானது என சக நடிகைகள் ஆச்சரியப்படுகிறார்களாம்.

இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலுடன் 'மன்னர் வகையரா', சிபிராஜுடன் 'கட்டப்பாவை காணோம்', பரத்துடன் 'என்னோடு விளையாடு', அஞ்சனா இயக்கத்தில் 'பல்லாண்டு வாழ்க', நடன இயக்குநர் கவுதம் இயக்கத்தில் 'கண்ணுல காச காட்டப்பா', அமீர் தயாரிப்பில் 'டாலர் தேசம்', சந்தோ‌ஷுடன் 'நான் அவளை சந்தித்த போது', நவின் கிருஷ்ணா வுடன் 'அயனா இஷ்டம் நூவு' என்ற தெலுங்குப் படம் என சாந்தினி நடிக் கும் படங்களின் பட்டியல் பெரிதாக உள்ளது.

"எனது நடிப்புக்கு இப்போதுதான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன். "திரையுலகில் ஒரே சமயத்தில் இத்தனை பட வாய்ப்புகள் கிடைப்பது அரிது என்பது தெரியும். எனவே கடந்த முறை நடந்ததுபோல் இப்போது கோட்டைவிட மாட்டேன். அடுத் தடுத்து வெளியாகும் படங்கள் ரசிகர் களைக் கவரும்," என்கிறார் சாந்தினி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!