பவர்ஸ்டாருக்காக அமைக்கப்பட்ட வித்தியாசமான பின்னணி இசை

திரை வண்ணன் இயக்கத்தில் சிவா, பவர்ஸ்டார், நைனா சர்வார் இணைந்து நடித்துள்ள படம் 'அட்ரா மச்சான் விசிலு'. ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசன் இடம்பெறும் முக்கியமான காட்சிகளுக்கு என வித்தியாசமான பின்னணி இசையை அமைத்திருப்பதாகச் சொல்கிறார் ரகுநந்தன். "பின்னணி இசைக்கான பணியைக் கவனிக்கும் சமயங்களில் எல்லாம், பவர்ஸ்டார், சிவா இணைந்துள்ள காட்சிகள் தினமும் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தன.

பவர்ஸ்டார் திரையில் வந்தாலே ரசிகர்கள் நிச்சயம் சிரிப்பார்கள் என உறுதியாகச் சொல்வேன். அதிலும் குறிப்பாக முதல் பாதியில் நிறைய அதிரடி வசனங்கள் பேசுவார். இரண்டாம் பாதியில் வேற மாதிரி வலம் வருவார். எனவே அதற்கேற்ற மாதிரி அவருக்கான பின்னணி இசையும் மாறும். மொத்தத்தில் இது ஒரு நல்ல நகைச்சுவைப் படம் இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரித்து ரசிக்கலாம்," என்கிறார் ரகுநந்தன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!