வித்தியாசமான பாத்திரங்களை எதிர்பார்க்கும் சமுத்திரக்கனி

சில காலத்திற்கு காவல்துறை சார்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி முடிவு செய்திருக்கிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் இயக்குநர் சமுத்திரக்கனி. அவருடைய உடலமைப்பு போலிஸ் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவும் இருந்ததால் பல இயக்குநர்களின் முதல் தேர்வாக சமுத்திரக்கனி இருந்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த படம் 'விசாரணை'. இந்தப் பாத்திரத்துக்காக சிறந்த துணை நடிக ருக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது. இப்படத்தின் இறுதிக் காட்சிக ளுக்காக சதுப்பு நிலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு பாம்புகள் சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டிருக் குமாம். அதனிடையே நடித்துக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. இப்போதும் 'விசாரணை' படத்தின் பாதிப்பில் இருந்து அவர் இன்னும் வெளியே வரவில்லையாம். அப்படத்தைத் தொடர்ந்து பல இயக்குநர்கள், போலிஸ் கதாபாத்தி ரத்துக்காக சமுத்திரக்கனியை அணுகி இருக்கிறார்கள். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்க அவர் மறுத்துள்ளார். "தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன. 'விசாரணை' கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் நடித்தேன். இன்னும் கொஞ்ச காலத்துக்கு போலிஸ் கதா பாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை. "மாறாக எனக்கு ஏற்ற வேறு கதாபாத்திரங்களைத் தேடிக் கொண்டி ருக்கிறேன். அவற்றுக்காக காத்திருப்ப தில் எனக்குப் பிரச்சினையில்லை," என்று தெரிவித்திருக்கிறார் சமுத்திரக் கனி.

காவல்துறை கதாபாத்திரங்களில் நடிக்கக் கேட்டதால், இதுவரை ஏறத்தாழ 15 பட வாய்ப்புகளை வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார். 'அப்பா' வெளியானதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சமுத்திரக்கனி. மிக விரைவில் தான் இயக்கப் போகும் புதுப்படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'அப்பா' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் சமுத்திரக்கனி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!