சமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி

சமுத்திரக்கனி இயக்கி, நடித்து வெளிவந்த 'அப்பா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சமுத்திரக்கனி அடுத்த படத்திற்கான வேலையில் உற்சாகமாக களமிறங்கியிருக்கிறார். தற்காலிகமாக 'தொண்டன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கெனவே சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். 'தொண்டன்' படத்தின் கதையை தன் நண்பரும் இயக்குநரும் நடிகருமான சசிகுமாருக்காகத்தான் முதலில் உருவாக்கியிருந்தாராம் சமுத்திரக்கனி. ஆனால், அவரின் தேதிகள் ஒத்துவராத காரணத்தால் தற்பொழுது இப்படம் ஜெயம் ரவி வசம் வந்திருக்கிறது. தன் கனவுப் படமான 'கிட்னா'வை முடித்துவிட்டு, 'தொண்டன்' படத்தில் சமுத்திரக்கனி களமிறங்குவார் எனத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!