பிரபலங்களாக வேண்டும் என்ற கனவோடு பலர் சினிமாவிற்குள் நுழைகி றார்கள். அவர்களில் சிலர் பிரபலங்களான தோடு மட்டும் திரையுலகில் தொடர்ந்து நிலைத்தும் நிற்கின்றனர். இப்படி இவர்கள் நிலைத்து நிற்க இவர்களின் கதை தேர்வும் ஒரு காரணம். அப்படி ஜெயம் ரவி, விஷால், சித்தார்த், கார்த்தி எனப் பலரும் தமிழ்ச் சினிமாவைக் கலக்கி வருகின்றனர். இவர்கள் நடிகர்கள் மட்டுமின்றி இயக்குனராக வேண்டும் என்றுதான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தனர். அப்படி உதவி இயக்குனராக இருந்து கதாநாயகனான அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகர்கள் உள்ளனர்.
விஷால்
விஷால் அதிரடி ஆக்ஷன் நாயகன். ஆனால் முதலில் இவர் இயக்குனராக வேண்டும் என்றே தமிழ்ச் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். இவர் ஆக் ஷன் கிங் அர்ஜுனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணி யாற்றியவர். 'செல்லமே' படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஜெயம் ரவி
இவர் ஆரம்பத்திலேயே கமல்ஹாசன் போன்ற ஜாம்பவானிடம் பணியாற்றியவர். 'ஆளவந்தான்' படத்தில் உதவி இயக்குன ராக வேலை பார்த்தவர் ரவி.
கார்த்தி 'பருத்திவீரன்' படத்தி
ன் மூலம் தமிழ்ச் சினிமாவைக் கலக்கியவர் கார்த்தி. இவர் ஆரம்பத்தில் இந்திய சினிமாவின் முதல்நிலை இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதில் கூடுதல் சிறப்பம்சமாக சூர்யா நடித்த 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தற்போது மணிரத்னம் இயக்கத்திலேயே நடிக்க விருக்கிறார் என்பதே குறிப்பிடத்தக்கது.
சித்தார்த்
சித்தார்த்தும் இயக்குநர் மணிரத்னத் தின் உதவி இயக்குனர்தான். இயக்கு னராக வேண்டும் என்ற ஆசையில் கோலிவுட்டில் இவர் களமிறங்க, ஷங்கரின் பார்வையில் விழுந்து 'பாய்ஸ்' பட நாயகனார்.
சமுத்திரக்கனி
இயக்குனராக வெற்றி பெற்றுள்ள சமுத்திரக்கனி ஒரு தேசிய விருது பெற்ற நடிகரும்கூட. 'நாடோடிகள்', 'போராளி' போன்றப் படங்களால் இவர் இயக்குனராக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், நடிப்பிலும் கலக்கி வருகிறார். இவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.