இயக்குநர் மதுபால்: நட்பின் வலிமையைச் சொல்லும் படம்

இறைவன் சினி கிரியேசன்ஸ் நிறுவ னம் தயாரிக்கும் படம் `ஒரு கனவு போல'. இந்தப் படத்தில் ராம கிருஷ்ணன், சவுந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகி யாக புதுமுகம் அமலா நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, சுப்ரமணி, கவி பெரிய தம்பி, வின்னர் ராமச்சந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுபால் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அழகப்பன்.என் ஒளிப்பதிவு செய்கி றார். இவர் மலையாளத்தில் அறுபது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்து, அதில் நாற்பது படங்களுக்கு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இ.எஸ்.ராம் இசையமைப்பில் புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வி.சி.விஜயசங்கர். இவர் 'பாரதிகண்ணம்மா', 'ஆட்டோ கிராப்', சந்தோஷ் சுப்பிரமணியம்', '23ஆம் புலிகேசி' உள்பட ஏராளமான வெற்றிப் படங்களின் இணை இயக்குநர். இவர் இயக்கும் முதல் படம் இது. "லாரி ஓட்டுநராக இருக்கும் ராம கிருஷ்ணனுக்கும் சினிமாவில் பாடகர் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் வாழும் சவுந்தர்ராஜனுக்கும் உள்ள நட்பின் வலிமையைச் சொல்லும் படம் இது. "கணவன், மனைவி உறவின் உன்னதங்களை, உள்ளுக்குள் இருக் கும் நற்பண்புகளையும் எடுத்துச் சொல்லும் படம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!